முட்டும் போர்…. இஸ்ரேலுக்கு அதிபர் ஜோ பைடன் வருகை – பாதுகாப்பு பலப்படுத்தல்!
இஸ்ரேலுக்கு அதிபர் ஜோ பைடன் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கு கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனை மீது நேற்று இரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் 500 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல் தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார்
மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல்லுக்கு வர இருக்கிறார். இதனால், அவர் வருகையை முன்னிட்டு, டெல் அவிவ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.