ஓபிஎஸ் எங்க கட்சிக்காரு… – சசிகலா அந்தர்பல்டி!
ஓபிஎஸ் எங்கள் கட்சிக்காரர் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தி இனிப்புகளை வழங்கினர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா பேசுகையில்,
நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஓபிஎஸ் எங்கள் கட்சிக்காரரு. அதிமுகவை ஒன்றிணைப்பேன். எனக்கு அந்த கெப்பாசிட்டி இருக்கு. எப்போ என்ன செய்யனுன்னு எனக்குத் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார்.