‘லியோ’ படத்தின் சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு திரையிட முடிவு!
நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. நாளை திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘லியோ’ படத்தின் ரசிகர்களுக்கான 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்ற பட நிறுவனத்தின் கோரிக்கை ஏற்க முடியாது என்றார்.
இதனையடுத்து, ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகிறது. காலை 9 மணியிலிருந்து திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு ஏற்கெனவே தொடங்கியதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணியிலிருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.