Mon. Jul 8th, 2024

ஒற்றுமை வேண்டும்… இஸ்ரேல் வர்றேன்… – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகள், உடைகள் இழந்து தவித்து வருகின்றனர்.

நேற்று லெபனான் எல்லையில் உள்ள 28 சமூகங்களைச் சேர்ந்த மக்களை வெளியேற்றும் திட்டத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேஸ் -ஹமாஸ் படைக்கு இடையே போர் நடக்கும் இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்ல இருக்கிறார்.

ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையாக நிற்க நாளை நான் இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.