Sun. Oct 6th, 2024

ஓரினச்சேர்க்கை திருமண சட்ட அங்கீகாரம் : நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

இந்தியாவில் LGBTQIA+ தம்பதிகளுக்கு திருமண உரிமை கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் முன்பு வந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறுகையில்,

தன்பாலின திருமணம் என்பது முன்னேறிய வகுப்பினர் இடையே மட்டும் காணப்படுவதல்ல.

திருமண விவகாரத்தில் சட்டங்களால் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரே பாலின திருமணம் தொடர்பாக நான்கு தீர்ப்புகள் உள்ளன.

ஓரினச்சேர்க்கை ஒரு நகர்ப்புறக் கருத்து அல்ல. சமூகத்தின் உயர் வகுப்பினருக்கானது அல்ல.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு: சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் தேவையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.