Fri. Dec 20th, 2024

லால் தன்ஹாவ்லாவை பார்க்க ஜாலியா டூவிலரில் சென்ற ராகுல் காந்தி – வைரல் வீடியோ!

வடகிழக்கு மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில் கட்சி வேட்பாளர்களுக்கிடையே பிரச்சாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக மிசோரம் வந்துள்ளார்.

நேற்று திரிபுராவின் தலைநகர் அகர்த்தலாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி ஐஸ்வால் வந்தார். சன்மாரி சந்திப்பிலிருந்து அணிவகுப்பைத் தொடர்ந்தார். சுமார் 4.5 கி.மீட்டர் தூரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மிசோரம் முன்னாள் முதலமைச்சர் லால் தன்ஹாவ்லாவின் இல்லத்திற்கு சொல்வதற்காக அப்பகுதியாக வந்த ஒருவருடைய இருசக்கர வாகனத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜாலியாக சென்றார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.