Mon. Jul 8th, 2024

‘லியோ’ படம் வெற்றி அடைய வேண்டும் – ரஜினிகாந்த் பேட்டி!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.

இதனையடுத்து, தனது 170வது திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் படப்பிடிப்புக்காக கேரளா சென்றார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தற்போது, நெல்லை, கன்னியாகுமரியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தற்போது தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

தூத்துக்குடிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, 47 வருடங்களுக்கு பிறகு நான் இங்கு வந்திருக்கிறேன். மக்களிடம் சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. லியோ படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைய நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.