Mon. Jul 8th, 2024

விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்ட த்ரிஷா!

‘லியோ’ படப்பிடிப்பில் விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

‘லியோ’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.