Thu. Dec 19th, 2024

ரஜினியை நேரில் சந்தித்து பேசினார் பொன் இராதாகிருஷ்ணன்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.

இதனையடுத்து, தனது 170வது திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் படப்பிடிப்புக்காக கேரளா சென்றார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நேற்று முன்தினம் நெல்லையில் படப்பிடிப்பு முடித்துக் கொண்டு நடிகர் ரஜினி தற்போது, சினிமா படப்பிடிப்புக்காக கன்னியாகுமரிக்கு வந்துள்ளார்.

கன்னியாக்குமரிக்கு வந்திருந்த நடிகர் ரஜினியை, மரியாதை நிமித்தமாக பாஜக மூத்த தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.