தமிழகம் முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு!
தமிழகம் முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.
இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில், மறைந்த முன்னோர்களின் சாந்திக்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘பித்ரு கர்ம பூஜை’ செய்து வருகின்றனர்.
மேலும், நாமக்கலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மோகனூரில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வந்து தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்தனர்.