பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை!
இன்று நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
இப்போட்டிக்காக ஒரு லட்சத்து 32 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.
இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு 10,000க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் பூஜை செய்தனர்.