பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய அனா லிலியா ரிவேரா!
இன்று டெல்லியில் 9வது பி20 உச்சி மாநாட்டு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இன்று பி20 உச்சி மாநாட்டை நடத்துகிறோம். இந்த உச்சி மாநாடு அதிகாரத்தைக் கொண்டாடும் ஊடகமாகவும் உள்ளது.
நமது நாட்டு மக்களின், ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மெக்சிகன் செனட்டின் தலைவர் அனா லிலியா ரிவேரா பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டினார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.