Fri. Dec 20th, 2024

வரும் 17ம் தேதி அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டம் : ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னையில் வரும் அக்டோபர் 17ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.