Sun. Oct 6th, 2024

ஏ.எம்.விக்ரமராஜா தலைமையில் பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பு சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்…!

ொழில் வணிகத்துறையை முற்றிலும் முடக்கி வைக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சட்ட மன்ற முற்றுகை போராட்டம் இன்று சென்னை வாலாஜா சாலையில் நடைப்பெற்றது.

அரசின் பிளாஸ்டிக் தடை திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டம் நடத்தினர் அதற்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் மாற்று பொருளை கண்டுபிடிக்க வலியுறுத்தினார்.

சாலை முழுவதும் வணிகர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்…

அரசுக்கு கோசம் எழுப்பி கோரிக்கையை கூறினார்கள் பிளாஸ்டிக் தடை சட்டத்தை திரும்ப பெற
மத்திய அரசின் கொள்கை முடிவு எடுக்கும் வரை நிறுத்தி வை..

உள் நாட்டு வணிகர்களை வஞ்சிக்கிறதே
87 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தடையில்லை ஆனால் மறுசுழற்சி செய்ய குடிய சிறு வணிகர்கள் பிளாஸ்டிக் தடை.

அந்நிய பொருளுக்கு தடையில்லை உள்நாட்டு வணிகர்களுக்கு மட்டும் தடை…நியாயமா…!

என கோசங்களை எழுப்பி கோரிக்கையை முன் வைத்தனர் இறுதியாக சட்டமன்றத்தை நோக்கி முற்றுகையிட முயன்று செல்லும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்…