புதுக்கோட்டைமில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுமம், நேரு யுவ கேந்திரா, அஞ்சல் துறை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தாகூர் மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து சர்வதேச பெண்குழந்தைகள் தின விழாவினை சிறப்பாக நடத்தினர்.
இவ்விழாவினையொட்டி பள்ளி மாணவ மாணவ மாணவியருக்கு பேச்சு கவிதை ஓவியம் மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. தாகூர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் பொன் தங்கராஜ் தலைமையேற்றார்.
நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் மற்றும் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.
மாவட்ட குழந்தைகள் நலக் குழம தலைவர் சதாசிவம் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.