இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பறந்த ஆளில்லா ட்ரோன் – வெளியான ஷாக் தகவல்!
நேற்று இரவு இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பறந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
நேற்று இரவு, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள செக்டார் ஸ்ரீகங்காநகரின் ஸ்ரீகரன்பூரில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் ஒன்று பறந்தது-
இதைப் பார்த்த இந்தியப் பாதுகாப்புப் படையினர் அதை சுட்ட வீழ்த்தினர். பின்னர், அந்த ஆளில்லாத ட்ரோனை பரிசோதனை செய்தபோது, அதில் 2.2 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்த கைப்பற்றப்பட்ட அந்த ஹெராயின் மதிப்பு சுமார்.12 கோடியாகும்.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்புப் படையினர் விராசணை மேற்கொண்டு வருகின்றனர்.