இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மூளும் போர் – டெல்லியில் ரோந்து பணியில் போலீசார்!
கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தில் இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். போருக்கு அஞ்சி இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவிலிருந்து டெல்லியில் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் போர் காரணமாக, டெல்லி போலீசார் ஜமா மஸ்ஜித் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.