இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – மக்கள் அலறல்!
சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தில் வீடு குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர்.
நூற்றுக்கணக்கானோர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பேரழிவிற்குப் பின் ஆப்கன் மக்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சோகம் மறைவதற்குள் இன்று ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.