இஸ்ரேலிலிருந்து இன்று 212 இந்திய மக்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்!
இஸ்ரேலிலிருந்து இன்று 212 இந்திய மக்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்.
கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தில் இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். போருக்கு அஞ்சி இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலிலிருந்து ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் மூலம் 212 இந்திய மக்களை ஏற்றிச் சென்ற முதல் விமானத்தில் பயணிகள் ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இஸ்ரேலில் இருந்து திரும்பிய இந்தியர் ஒருவர் கூறுகையில், “அங்கே இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்வது இதுவே முதல் முறை. எங்களை மீட்டெடுத்த இந்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம். கூடிய விரைவில், முடிந்தவரை சீக்கிரம் வேலைக்குச் செல்லலாம் என்றார்.