47 வருஷம் கழிச்சு நெல்லை வந்துருக்கேன் – நெல்லையில் நினைவை பகிர்ந்த ரஜினிகாந்த்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.
இதனையடுத்து, தனது 170வது திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் படப்பிடிப்புக்காக கேரளா சென்றார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதன்பின்பு, இன்று படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் நெல்லை சென்றார். படப்பிடிப்பு தளத்தில் தன் வாகனத்தை விட்டு இறங்கிய ரஜினிகாந்த், 47 வருஷம் கழிச்சு நெல்லை வந்துருக்கேன் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ –