Mon. Jul 8th, 2024

இஸ்ரேலுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார்.

அப்போது நெதன்யாகுவிடம், “நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் எங்கும் செல்லவில்லை” என்று பிளிங்கன் கூறினார்.

இதன் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் கைகுலுக்கி, இஸ்ரேலுடன் நின்றதற்காக அவருக்கும் அமெரிக்காவுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசுகையில், “நான் இப்போது உங்கள் முன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக மட்டுமே வந்திருக்கிறேன். ஆனால் நான் ஒரு யூதனாகவும் இருக்கிறேன். என் தாத்தா ரஷ்யாவில் படுகொலைகளில் இருந்து தப்பியோடினார். எனது மாற்றாந்தாய் ஆஷ்விட்ஸ் வதை முகாம்களிலிருந்து தப்பினார். அதனால், எனக்கு புரிகிறது. தனிப்பட்ட அளவில் ஹமாஸின் படுகொலைகள் இஸ்ரேலிய யூதர்களுக்காகவும் உண்மையில் எல்லா இடங்களிலும் உள்ள யூதர்களுக்காகவும் கொண்டுசெல்லும் வேதனையான எதிரொலிகள் என்று பேசினார்.