பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி நிச்சயம் வெல்லும் – யுவராஜ் சிங் நம்பிக்கை!
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள இரு அணிகளும் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்திற்கு வந்தடைந்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான், இந்தியா இடையிலான போட்டி எப்படி இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடப்பதால் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.
நான் சொல்றேன் இந்தியா நிச்சயமாக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இது ஒரு பெரிய மேடை, எனவே இதை அனுபவிக்கவும். தற்போது, இரு அணிகளும் நம்பிக்கையுடன் உள்ளன என்றார்.