பாகிஸ்தானை எதிர்கொள்ள குஜராத்திற்கு வந்தடைந்த இந்திய அணி!
தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கன் அணியை வீழ்த்தியது.
இதனையடுத்து, இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இந்திய-பாகிஸ்தான் அணி போட்டி வரும் அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள ஏற்கெனவே பாகிஸ்தான் அணி வந்தடைந்தது. இதனையடுத்து, ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தற்போது இந்திய அணி குஜராத்தில் உள்ள அகமதாபாத்திற்கு வந்தடைந்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.