Thu. Dec 19th, 2024

‘லியோ’ படம் வெற்றி பெற லோகேஷ் கனகராஜ் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!

‘லியோ’ படம் வெற்றி பெற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

‘லியோ’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று இரவு பாதயாத்திரையாக நடந்து சென்று மலையேறி ஏழுமலையானை இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரிசனம் செய்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.