இமயமலையில் துரிய உணவை சாப்பிடும் ரஜினி – வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமல்லா உலகளவிலும் ரசிகர்களை கொண்டுள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.
தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் கேரளா சென்றார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், இமயமலையில் பசியில் துரித உணவை வெறியோடு சாப்பிடுவது போல் உள்ளது.
இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.