Fri. Dec 20th, 2024

காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி புதுக்கோட்டையில் 3000 பேர் மறியல்!

காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி புதுக்கோட்டையில் 3000 பேர் மறியல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்துவிடக்கோரியும் புதுக்கோட்டையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமை வைகித்தார். போராட்டத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞான.இளங்கோவன், திமுக நகரச் செயலாளர் செந்தில்,சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்ட செயலாளர் த.செங்கோடன், மதிமுக மாவட்ட செயலாளர் கே.கலியமூர்த்தி, விசிக மாவட்ட செயலாளர் வெள்ளைநெஞ்சன், திமுக விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் த.சந்திரசேகரன், திமுக விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் வி.என்.மணி, இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமையன், கொருக்குமடை விவசாய சங்கத் தலைவர் கல்லணை ரமேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இம்மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர்.

அமானுல்லா புதுக்கோட்டை