பதநீர் சேகரித்த போது மரத்திலே உயிரிழந்தார்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் கல்லாவி மத்தூர் ஆணந்தூர் சாமல்பட்டி பகுதியில் அதிக அளவில் பணைமரம் உள்ளதால் இப்பகுதியில் சுமார் 600க்கும் மேற்ப்பட்ட மரமேறி வருமானம் ஈட்டிவருவது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் வழக்கம்போல் கஞ்சனூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் அருகே உள்ள நாடார் தெருவில் பதநீர் சேகரிக்க மரம் ஏறியுள்ளார்.
பதநீர் சேகரிக்க சென்றவர் மேலிருந்தவாரே தீடீர் என உமிழ்ந்து தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கணேசனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது
இதன் காரணமாக சாமல்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்…