போக்குவரத்து போலீசாரை செருப்பால் அடித்த பெண் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் ஒரு பெண் இ-ரிக்ஷா ஓட்டுநர் போக்குவரத்து போலீசாரிடம் தவறாக நடந்து கொள்கிறார்.
மேலும், அந்த பெண் தனது செருப்புகளை எடுத்து போக்குவரத்து காவலரை அடிக்கிறார்.
இதனையடுத்து, இந்திராபுரம் காவல் நிலையத்தில் டி.எஸ்.ஐ.யால் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவில், பெண் போலீஸ்காரரிடம் கையில் செருப்புடன் வாக்குவாதம் செய்வதும், அவரை செருப்பால் அடிப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
பெண்ணின் வண்டியில் நம்பர் பிளேட் இல்லாததால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டபோது இச்சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண்ணின் செயல் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.