பாலியல் வன்கொடுமை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
பாலியல் வன்கொடுமை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சட்டமன்ற பேரவையில் பேசுகையில்,
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவலர்கள் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அன்றைய தினமே 3 காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும் துறை ரீதியாகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலில் வன்கொடுமைகள் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும், இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்க, மறைந்த வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.