எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – அதிமுகவினர் கடும் அமளி!

இன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில்
சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபெற்று வரும் சட்டசபை பேரவையில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன் என்று பேசினார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக்கு குறித்து 10 முறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 3 உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் சபாநாயகர் செய்யவில்லை என்றார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் பேசிக்கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதவாளர்கள் பேச முற்பட்டதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
மேலும், சட்டமன்ற பேரவையில்
சபாநாயகர் இருக்கை முன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அதிமுகவினரை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.