Fri. Jul 5th, 2024

புளிப்பு கார வடை – சுவையாக செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 1 கப்

துவரம்பருப்பு – 1 கப்

உளுத்தம்பருப்பு – அரை கப்

பச்சரிசி – அரை கப்

காய்ந்த மிளகாய் – 8

புளி – சிறிய உருண்டை

பெருங்காயம் – அரை தேக்கரண்டி

தேங்காய் துருவல் – அரை கப்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பருப்பு, அரிசி வகைகளை ஊற வைக்க வேண்டும். மிளகாயையும் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

நன்கு ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்க வேண்டும்.

எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுக்க வேண்டும்.

புளிப்பும் காரமும் சேர்ந்த வடை ருசியாக இருக்கும்.