‘இஸ்ரேலுக்கு இந்திய மக்களின் ஆதரவு உண்டு’ – பெஞ்சமின் நேதன்யானிடம் பேசிய பிரதமர் மோடி
‘இஸ்ரேலுக்கு இந்திய மக்களின் ஆதரவு உண்டு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யானிடம் பிரதமர் மோடி பேசினார்.
தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் கடந்த சனிக்கிழமையிலிருந்து பயங்கரமான போர் நடைபெற்று வருகிறது.
இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘போரை நாங்கள் தொடங்கவில்லை. ஆனால், நாங்கள் வெற்றிகரமாக அதனை முடித்துவைப்போம். இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறக்கமுடியாத பதிலடியை நாங்கள் கொடுப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் குறித்த சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தற்போதைய நிலை குறித்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு நன்றி. கடினமான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.