Fri. Dec 20th, 2024

பிணைக் கைதியாக இருக்கும் இஸ்ரேலியர் பகிரங்கமாக தூக்கிலிடப்படுவார்கள் – ஹமாஸ் மிரட்டல்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல தசாப்தங்களாக நடந்து வரும் போர் மீண்டும் ஆக்ரோஷமாக மாறியுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று, பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது சுமார் 5000 ராக்கெட்டுகளை வீசியது, அதன் பிறகு இரு தரப்பிலிருந்தும் தாக்குதல் இப்போது பயமுறுத்தும் வடிவத்தை எடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ஹமாஸ் நெஞ்சை பதற வைக்கும் மிரட்டல் ஒன்றை ஹமாஸ் விடுத்துள்ளது.

போருக்கு மத்தியில், ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபீட் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா பகுதியில் இஸ்ரேல் ஏவப்பட்ட ராக்கெட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் பிணைக் கைதியாக இருந்த இஸ்ரேலியர் பகிரங்கமாக தூக்கிலிடப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் ஏவப்பட்ட ராக்கெட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பிணைக் கைதியை தூக்கிலிடுவது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பின்னர் இணையத்தில் வெளியிடப்படும் என்று ஹமாஸ் அதிர்ச்சியூட்டும் வகையில் பேசியுள்ளார்.