மேட்டூர் அணையில் சரிந்த நீர்மட்டம் – வெளியே தென்படும் நந்தி சிலை!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால், பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை முழுவதுமாக வெளியே தென்பட்டது.
மொத்தம் 120 அடி நீர்க்தேக்க உயரம் கொண்ட மேட்டூர அணையில் தற்போது 31 அடி உயரம் மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது இன்று மாலை நிறுத்தப்படுகிறது.
குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கனஅடி நீர் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் சரிந்ததை அடுத்து நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அணை பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
நந்தி சிலையின் தரிசனத்தைப் பார்த்த மக்கள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.