உதயநிதியை அவதூறாக பேசிய குமரகுரு – பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார்!
உதயநிதியை அவதூறாக பேசியதாக குமரகுரு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார்.
கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பொதுக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மன்னிப்பு கேட்டார்.