சுப்மன் கில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் ஷாக்!
இந்தியாவில் தற்போது 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நவம்பர் 19ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதலால், இவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று சுப்மன் கில் நாளை டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய போட்டியில் விளையாடமாட்டார் என்றும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்தது.
இன்று சுப்மன் கில்லுக்கு டெல்லி காய்ச்சலால் அவர் உடலில் ரத்த தட்டை அணுக்கள் சற்று குறைந்துள்ளதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சுப்மன் கில் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு உடல் சோர்பு மற்றும் காய்ச்சல் அதிகமாக இருப்பதால் உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சுப்மன் கில்லின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.