அதிர்ச்சி : கேரளாவில் தீவிரமாக பரவி வரும் புருசெல்லோசிஸ் நோய்!
கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் புருசெல்லோசிஸ் என்ற புது வகையான நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெம்பாயம், வேற்றிநாடு என்ற இடத்தில் இந்நோயின் தொற்று அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளிலிருந்து இந்நோய் பரவி, தந்தை மற்றும் மகனை தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து கேரளா சுகாதாரத்துறை கேரள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.