Fri. Dec 20th, 2024

குடிநீர் வசதி இல்லாமல் தவித்த கிராம மக்கள் – 2 போர் அமைத்து கொடுத்து அசத்திய நடிகர் விஷால்!

தூத்துக்குடி அருகே குடிநீர் வசதி இல்லாமல் தவித்த கிராம மக்களுக்கு 2 போர் அமைத்து கொடுத்து நடிகர் விஷால் அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமா பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால்.

தற்போது நடிகர் விஷால், இயக்குநர் ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, ‘விஷால்34’ புதிய படம் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஷால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்த குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் நடிகர் விஷாலிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

எங்களுக்கு ரொம்ப ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை. குடிநீர் இல்லாததால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டனர்.

உடனே நடிகர் விஷால் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, அந்த கிராமத்தில் போர் ஏற்படுத்தி 2 தண்ணீர் டேங்குகள் அமைத்து கொடுத்து அசத்தியுள்ளார்.