Sun. Oct 6th, 2024

உ.பி.யில் குப்பைகளால் செய்யப்பட்ட காந்தி சிலை – மக்கள் அதிர்ச்சி!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காந்தி சிலை குப்பைகளை செய்யப்பட்டால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், முனிசிபல் கார்ப்பரேஷனால் “ஜூகாத் ஃப்ரம் ஜங்க்” என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

இந்த பிரச்சாரத்தில், முனிசிபல் கார்ப்பரேஷனின் குப்பைகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மீரட்டின் சந்திப்புகளில் வைக்கப்பட்டன. ஆனால், அந்த கலைப்பொருட்களில் ஒரு சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, குப்பைகளால் செய்யப்பட்ட பல கலைப்பொருட்கள் மீரட்டில் நிறுவப்பட்டன, அவை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

மீரட்டில், அக்டோபர் 2ம் தேதி, மகாத்மா காந்தியின் சிலை குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே கமிஷனர் சந்திப்பில் நிறுவப்பட்டது. இதைப் பார்த்ததும் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து உடனடியாக அந்த காந்தி சிலையை அகற்ற வற்புறுத்தி வந்தனர்.

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட் மாநகராட்சி இந்த சிலையை அகற்றியது.