Mon. Jul 8th, 2024

காவிரி விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்!

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடியது. காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், எந்த சூழலிலும் தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை விட்டு தராமல் பெற்று தருவோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

மேலும், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் 2021ம் ஆண்டில் 46.2 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2022ம் ஆண்டு 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தியும் நடந்துள்ளது காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருக்கும்.

நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை என்றார்.