Sun. Oct 6th, 2024

சிறையில் தவறி விழுந்த அமைச்சர் செந்தில் பாலாஜி – வெளியான மருத்துவ ரிப்போர்ட்!

அமலாத்துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 13-ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அந்த மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர் ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடனே அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு படுக்கையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையிலிருந்து இதயமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.

இதய அறுவை சிகிச்சைக்காக காலிலிருந்து நரம்பு எடுக்கப்படாததால் காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், செந்தில் பாலாஜி நடப்பதற்கு சிரமப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.