Fri. Dec 20th, 2024

தமிழக முதலமைச்சரை சிபிஎம் தலைவர்கள் நேரில் சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த சந்திப்பில் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினோம் என்று தெரிவித்தார்.