Thu. Dec 19th, 2024

லியோ படத்திற்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி – வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம். நீங்கள் நல்லா இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். லியோ பட ட்ரெய்லர் வெளியான சமயத்தில் நான் ஊரில். லியோ பட ட்ரெய்லருக்கு நீங்கள் அனைவரும் சப்போர்ட் பண்ணிருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றி, ரசிகர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், என்னுடைய குடும்பத்தார் மற்றம் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.