Fri. Dec 20th, 2024

மீனை சைவத்துல சேர்க்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!

மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய மீன்வளத்துறை அமைச்சர் முன்னிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சாகர் பரிக்கரமா திட்டம் 9ம் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சியாவயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல நலத்திட்ட உதவிகளுக்கு மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்பு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்,

மீனில் அதிகளவில் புரத சத்து உள்ளது. மேலும் மீனை சாப்பிட்டால் இதயத்தில் மிகவும் நல்லது. இதய அடைப்பு வருவதை தடுக்கும். மீன் உணவு ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். மேலும், மீனில் ஒமேகா 3 உள்ளது. ஆதலால், முட்டையை சைவத்தில் சேர்த்தது போல மீனையும் சைவத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.