நான்தான் விஜய்யை கட்டாயப்படுத்தி ஆபாசமாக பேச வைத்தேன் – இயக்குநர் லோகேஷ் விளக்கம்!
‘லியோ’ படத்தில் நான்தான் நடிகர் விஜய்யை கட்டாயப்படுத்தி ஆபாசமாக பேச வைத்தேன் என்று அப்பட இயக்குநர் லோகேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஆனால், இந்த பட ட்ரெய்லரில் விஜய் பேசியுள்ள கெட்ட வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லியோ திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், லியோ டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி அகில் பாரத் இந்து மகா சபா புகார் கொடுத்துள்ளது.
இந்நிலையில், விஜய் பேசிய ஆபாச வார்த்தைக்கு நான் தான் பொறுப்பு என்று இயக்குநர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விளக்கம் கொடுக்கையில், லியோ முன்னோட்டத்தில் விஜய் பேசிய ஆபாச வார்த்தைக்கு தானே தான் முழு பொறுப்பு. விஜய்யை நான்தான் கட்டாயப்படுத்தி பேச வைத்தேன் என்று பேசினார்.