உச்சக்கட்டத்தின் கொடூரம் – இஸ்ரேலியர்களை பிணைய கைதியாக பிடித்து ஹமாஸ் அட்டூழியம்!
நேற்று முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்டப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், காசா பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, இரு தரப்பினருக்கும் நடைபெற்ற போரில் 500க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பாலஸ்தீன பயங்கரவாதி அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேலைச் சேர்ந்த 3 பேரைப் பிணையக் கைதிகளாக்கி பிடித்து அவர்களை துன்புறுத்தினர்.
இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த உலக மக்களின் நெஞ்சம் ரணமாகியுள்ளது.