Fri. Dec 20th, 2024

ஓசூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நேற்று தமிழக – கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்து அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இத்தீ கொஞ்ச நேரத்தில் மளமளவென எரிய ஆரம்பித்தது. பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேரில் 11 பேர் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர்களாவர்.

உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.