நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான் – பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது!
நேற்று ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.
ஹெராட் என்ற பகுதியில் வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதன் பிறகு அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் வீடு குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர்.
தற்போது, அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 300ஐ கடந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.