Thu. Dec 19th, 2024

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : இன்று இந்தியா-ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதல்!

கடந்த 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 83.10 கோடியாகும். இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன், பரிசாக ரூ.33.24 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 16.61 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் இரு அணிக்கு தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும்.

இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்தியா அணி, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி.கோப்பையை வெல்லாத குறை உள்ளது. அந்த குறையை சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா முறியடித்து வெற்றி வாகை சூடுமா என்று மிகுந்த ஆர்வத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.