Thu. Dec 19th, 2024

உடல் சூடா இருக்கா? கவலை வேண்டாம்… இதை பின்பற்றினால் போதும்!

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு உடல் சூடு ஏற்படுகிறது. உடல் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டாலே பல நோய்களிலிருந்து விடுபட்டு விடலாம். நம் உடலில் அதிகப்படியான உஷ்ணம் பல பாதிப்பை ஏற்படுத்திவிடும்,.

உடல் சூட்டால், வயிறு, கண், சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக வரும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ,வயிற்று வலி ,சளி தொல்லை ,உடலில் பாகங்களில் கட்டிகள் ஏற்படும். சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட உடனே மாத்திரைகளை போட்டுக்கொள்வதாலும் உடல் வெப்பம் அடைகிறது.

சரி…. உடல் சூட்டை எப்படி தணிக்கலாம் என்று பார்ப்போம்

புழுக்கமான இடத்தில் இருக்கக்கூடாது. இதனால், வெப்பம் அதிகரிக்கும்.
எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடிக்க வேண்டும்.
தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காபி, டீ தவிர்த்து தினமும் கருப்பட்டியை சேர்த்துக் குடிப்பது மிகவும் நல்லது.
வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீர் குடித்து வரலாம்.
தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளிக்காலம்.
சுடுதண்ணீரில் குளிப்பது உடல் சூட்டை அதிகரிக்கும்.
உணவில் கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
பருத்தி, கைத்தறி துணிகளை அணிய வேண்டும்.
இளநீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
பழங்கள் அடிக்கடி எடுத்து கொள்வது நல்லது.
தினமும் ஜீரகத் தண்ணீரை குடித்து வரலாம்.
வாரத்தில் 2 முறை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் சாப்பிடலாம்.
தொப்பிளில் 2 துளிகள் விளக்கெண்ணெய் வைத்து உறங்கலாம்.